மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்றது.- படங்கள்
முருங்கன் பிரதேச மக்களின் சுகாதார நிலையினை மேம்படுத்தும் முகமாக குறித்த இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செயயப்பட்டிருந்தது.
இன்று காலை நடைபெற்ற மருத்துவ முகாமினை பிரதம விருந்தினராக வருகை தந்த வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. ஸ்டான்லி டி மெல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
டிலாசால் அருட் சகேதரர்களின் மன்னார் கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை ஆகியன இணைந்து குறித்த மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்திருந்தன.
பல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற நாட்டின் பல பாகங்களிலும் பணிபுரிந்த வைத்திய நிபுணர்கள் 26 பேரின் பங்குபற்றுதலுடன் குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதன் போது பொது வைத்திய சேவைகள்,காது சிகிச்சை, மூக்கு சிகிச்சை,தொண்டை பிரிவு, கண் சிகிச்சை,பல் சிகிச்சை ,மகப்பேற்று பெண்கள் தொடர்பான சிகிச்சை,எலும்பு தொடர்பான சிகிச்சை, இருதய சிகிச்சைகள் மக்களின் நலன் கருதி ஏற்பாடு செய்யபட்டு சிறப்பாக நடைபெற்றது.
இன்நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்திய அதிகாரி திரு.ஒஸ்மன். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவர் திரு.கெனடி,இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட பெறுப்பதிகாரி திரு.ரூக்சன் ,அரச உயர் அதிகாரிகள், டிலாசால் அருட்சகோதரர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
லுயிஸ் மாசல்
மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்றது.- படங்கள்
Reviewed by Admin
on
October 18, 2013
Rating:
No comments:
Post a Comment