அடுத்த மாதம் முதல் 7 வீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிப்பு; தனியார் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு
அடுத்த மாதம் முதல் தனியார் பஸ் கட்டணங்கள் 7 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் புதிய பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இவ்விடயம் தொடர்பில் நாளை விசேட கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும். பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எந்தவித அறிவித்தலும் தமக்கு விடுக்கப்படவில்லை ,இவ் வருடம் பெப்ரவரி மாதம் நூற்றுக்கு 7 வீத கட்டண அதிகரிப்பை தாம் கோரியதாகவும் அதற்கு தனியார் போக்குவரத்து அமைச்சர் எதிர்ப்பை தெரிவித்ததாகவும் கெமுனு விஜேரட்ன குற்றஞ்சாட்டியுள்ளதுடன், நூற்றுக்கு ஏழு வீத கட்டண அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை உள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டத்தின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நூற்றுக்கு 10 வீதமாக கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தில் பிரதான செயலாளர் அஞ்சன பிரியங்ஜித் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு ஏழு வீத கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், ஏழு வீத கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள தயாரில்லை எனவும் உரியவர்கள் இதற்கு தீர்வு வழங்காவிடில் நீதிமன்றை நாடவுள்ளதாகவும் அஞ்சன பிரியங்ஜித் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் முதல் 7 வீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிப்பு; தனியார் போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு
Reviewed by Admin
on
October 12, 2013
Rating:

No comments:
Post a Comment