முல்லைத்தீவு விவசாயிகளுக்கு விவசாய ஊக்குவிப்புக்கள்.
முல்லைத்தீவு மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தால் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில்
மேற்கொள்ளவுள்ள பயிர்ச் செய்கைக்கான விதை பொருட்களை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் மாவட்ட பிரதிவிவசாயப் பணிப்பாளர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இப்பகுதியில் வெள்ளம் , கடும்வரட்சி மற்றும் தாக்கங்களுக்கு உள்ளாகி செய்கைகள் அழிவடைந்ததால் விவசாயிகளால் தரமான விதை பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டது . இத்தகைய நிலையில் மீள்குடியேறியுள்ள மக்களின் செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் உலக உணவு ஸ்தாபனத்தால் இலவசமாக மக்களுக்கு விதை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன .
சுமார் 8 ஆயிரத்து 750 ஏக்கர் செய்கைகளை மேற்கொள்வதற்கென விதை நெல் , நிலக்கடலை , உழுந்து , பயறு , கௌபி போன்ற விதை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் .
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு விவசாய ஊக்குவிப்புக்கள்.
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment