மன்னாரில் சமுர்த்தி முகாமைத்துவ செயலமர்வு
மன்னாரில்
சமுர்த்தி முகாமையாளர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கான வங்கி கணக்கு தொடர்பான பயிற்சி நெறி செயலமர்வு ஒன்று மன்னாரில் நடைபெற்று வருகிறது.
 இப் பயிற்சி செயலமர்வினை சமுர்த்தி மகாசங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 19ம் திகதி மன்னார் ஆங்கில மையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் குனைஸ் பாறுக் கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார். 
சமுர்த்தி பயன் பெறும் குடும்பங்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் முகமாக இந்த பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப் பயிற்சி செயலமர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையிலான 7 நாட்கள்  நடைபெறவுள்ளது.
இப் பயிற்சி செயலமர்வில் கொழும்பு,முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களை சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்கலாக 90 பேர் பயிற்ச்சி செயலமர்வில் கலந்து கொள்கின்றனர்.
 இப் பயிற்சி செயலமர்வினை சமுர்த்தி அதிகார சபையின் முன்னைநாள் பணிப்பாளர் திரு.எம்.நடேசராஜா மற்றும் மன்னார் மாவட்ட சமூர்த்தி உதவி ஆனையாளர் திரு.கே.சசிதரன் ஆகியோரின் நெறிப்படுத்தலுடன் நடைபெற்று வருகிறது.
இப் பயிற்ச்சி செயலமர்விற்கு வளவாளர்களாக திரு.ஜ.அலியார் மற்றும் திரு.கே.நேசராஜா ஆகியோர் கடமையாற்றுகின்றனர்.
லுயிஸ் மாசல்
மன்னாரில் சமுர்த்தி முகாமைத்துவ செயலமர்வு
 Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 21, 2013
 
        Rating: 
       
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment