அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பயிற்சியும்

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பயிற்சியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டில் நேற்று புதன்கிழமை (16) நடைபெற்றது. இந்த இலவச மருத்துவ முகாமில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதுடன், சுகாதார விழிவுப்புணர்வு பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், அனர்த்தங்களின்போது மேற்கொள்ளப்படவேண்டிய முதலுதவிகள் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவ முகாமில் 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

 இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட உரையாற்றிய வடமாகாண சபை உறுப்பினர் இ.ரவிகரன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உளரீதியாக பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். 

இந்த மக்களிற்கு இவ்வாறான மருத்துவ சேவைகள் ஒரு ஆறுதலை அளிக்கக் கூடியதாக அமையும். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளவர்கள் யுத்தத்தால் பொருளாதார ரீதியிலும் உடல் உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து மக்களை மீள்ளெழுச்சி பெறுவதற்கு இவ்வாறான சேவைகள் பெரிதும் பங்காற்றுகின்றன எனக் கூறினார்.
முல்லைத்தீவில் இலவச மருத்துவ முகாமும் முதலுதவிப் பயிற்சியும் Reviewed by Admin on October 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.