நீதிபதியாவதே எனது இலட்சியம்-மன்னார் மாவட்டத்தில் 9 ஆவது இடத்தை பெற்றுள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவன் செல்ரன் யூடிற் செறோன்.
நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவன் செல்ரன் யூடிற் செறோன் 179 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 9 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில்,,,,
நான் புலமைப்பரிசில் பரிட்சையில் 179 புள்ளிகளைப்பெற்;று மன்னார் மாவட்டத்தில் 9 இடத்தை பெற்றுள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இதற்கு காரணமாக எனது வகுப்பாசிரியர் திரு.பா.லெக்ஸ் அவர்கள் செயற்பாட்டார். அவருடன் இணைந்து கற்பித்த ஆசிரியர் திரு.க.ரவி மற்றும் ஏனைய ஆசிரியர்கள் ஆகியோரின் வழி நடத்தலை பின் பற்றியதன் காரணமாக நான் இந்த வெற்றியை அடைந்துள்லேன்.
இது மட்டுமின்றி இப்பாடசாலையில் 20 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
எனவே எனது வெற்றிக்கு தொடர்ந்தும் ஊக்கமளித்து வந்த இப்பாடசாலையின் அதிபருக்கும் எனது பெற்றோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்
எதிர்காலத்தில் நீதிபதியாகி எனது மக்களுக்கும்,எனது மாவட்டத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 179 புள்ளிகளை பெற்று மன்னார் மாவட்டத்தில் 9 ஆவது இடத்தை பெற்றுக்கொண்ட மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்ரன் யூடிற் செறோன் மேலும் தெரிவித்தார்.
நீதிபதியாவதே எனது இலட்சியம்-மன்னார் மாவட்டத்தில் 9 ஆவது இடத்தை பெற்றுள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவன் செல்ரன் யூடிற் செறோன்.
Reviewed by Admin
on
October 06, 2013
Rating:
No comments:
Post a Comment