மன்னாரில் திவிநெகும வேலைத்திட்ட வைபவம்-படங்கள்
நாடு பூராகவும் நடைபெற்று வரும் திவி நெகும என அழைக்கப்படும் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் 5 ஆவது கட்ட நிகழ்வு மன்னாரிலும் வெகு விமர்சையாக இன்று வெள்ளிக்கிழமை(11-10-2013) அனுஸ்ரிக்கப்பட்டது.  
மன்னார் பகுதியில் ஒவ்வொரு கிராமப்பகுதியிலும் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி அலுவலர்களின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று 10.11 மணியளவில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. 
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமேல்,மன்னார் மாவட்ட உதவி செயலாளர் என்.பரமதாஸ் உற்பட பல திணைக்கள உயர் அதிகாரிகளும் ,சர்வமதத்தலைவர்களும் கலந்து கொண்டனர். 
இவ் நிகழ்வை முன்னிட்டு மன்னார் செயலக பகுதிக்குள் மரக்கறி விதைகள் நாட்டப்பட்டதோடு தென்னங்கன்றுகளும் அதிகாரிகள் மற்றும் சர்வமதத்தலைவர்களினால் நாட்டப்பட்டது.
அத்துடன் அங்கு சென்ற அனைவருக்கும் இலவசமாக மாங்கன்றுகள் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மன்னார் செயலக கேட்போர் கூடத்தில் விசேட கூட்டம் இடம் பெற்றது.
மன்னாரில்  திவிநெகும வேலைத்திட்ட வைபவம்-படங்கள் 
 Reviewed by Admin
        on 
        
October 11, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 11, 2013
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment