2013 ம்ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் எதிர் வரும் 29 ம் திகதியுடன் நிறைவு
யாழ் மாவட்டத்தில் 2013 ம்ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் எதிர்
வரும் 29 ம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளதாக அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் யாழ் மாவட்ட தேர்தல் தினைக்கள உதவி பதிவு அலுவலர் சி . அச்சுதன் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார் .
ஏற்கனவே 2013 ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவு செயது புதிய தேர்தல் இடாப்பு பொது மக்களின் பார்வைக்காக யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன .
தற்போது குறிப்பிட்ட வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டவர்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ளவும் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி 2013 ம் அண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதற்ககான இறுதி நடவடிக்கையாக தறபோது அனுப்பப்பட்ட சுற்று நிரூபம் அமைந்துள்ளது .
இது வரை தமது பெயர்களை வாக்காளர் இடாப்புக்களில் பதிவு செயது கொள்ள முடியாதவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் தமது பெயர்களை கிராம அலுவலர்களிடம் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தேர்தல் தினைக்கள அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார் .
2013 ம்ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தும் பணிகள் எதிர் வரும் 29 ம் திகதியுடன் நிறைவு
Reviewed by Admin
on
October 24, 2013
Rating:

No comments:
Post a Comment