அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி

'வவுனியா மாவட்டத்தில் தற்போது பப்பாசி செய்கை சிற்பபு பெற்று விளங்குவதுடன் மீள்குடியேறிய பிரதேச மக்களின் வாழ்வாதார தொழிலாகவும் காணப்படுகின்றது' என வவுனியா மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் ஏ.சகிலாபாணு தெரிவித்தார்.

வவுனியா மாவட்டதின் பப்பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் இது தொடர்ந்;தும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் மீள்குடியேறிய பகுதிகளை இலக்காக கொண்டு நாம் பப்பாசி செய்கையை மேற்கொண்டு வருகின்றோம். அம் மக்களின் அயராத உழைப்பும் ஆர்வமும் இன்று வவுனியா மாவட்டத்தில் இருந்து பப்பாசியை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது.

ஆரம்ப கட்டமாக வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் நெடுங்கேணி விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் 53 ஏக்கரில் 200 பயனாளிகளுக்கு ஐ.எல்.ஓ நிறுவனத்தின் நிதியுதவியுடன் விவசாய திணைகளத்தின் தொழில் நுட்ப அனுசரணையுடன் ரெட்லேடி எனப்படும் கலப்பின பப்பாசி வர்க்கம் வழங்கப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டமே இன்று வருமானம்தரும் வழியாக மாறியுள்ளது.

ஓர் விவசாயிகளுக்கு 0.25 ஏக்கருக்கு பப்பாசி செய்கைக்கு உதவி செய்கின்றோம். அந்தவகையில் ஆரம்ப செலவாக 800;00 ரூபா செலவாகின்றது. எனினும் நாம் முதல் கட்டத்தில் உதவி பெற்றவர்களுக்கு பல்வேறு உதவிகள் மூலம் அதனை வழங்கியிருந்தோம்.

இதனடிப்படையில் முதல் வருடத்திற்கான வருமானத்தை முதல் மூன்று மாதங்களில் இருந்துபெற முடிகின்றது. அந்த வகையில் முதல் வருட வரமானமாக 75 ஆயிரம் ரூபா பெற முடியும் எனினும் இரண்டாவது வருடத்தில் 30 ஆயிரம் ரூபா செலவு செய்யப்படும் நிலையில் வருடாந்தம் 0.25 ஏக்கரில் மூன்று இலட்சம் ரூபா வருமானமாக பெற முடிகின்றது.

வவுனியா மாவட்டத்தில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் 200 பயனாளிகளையுமு; ஒன்றிணைத்து வவுனியா வடக்கு பழச்செய்கையாளர்கள் கூட்டுறவு சங்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இக் கூட்டுறவு அமைப்பானது தங்கள் பிரதேசத்தில் உள்ள பழங்கைள ஏற்றுமதி செய்வதற்காக சி.ஆர் எக்ஸ்போட் எனப்டும் ஏற்றுமதி நிறுவனத்துடன் 49.51 வீத பங்குதாரர் அடிப்படையில் வடக்கு தெற்கு பழ உற்பத்தியாளர் கம்பனியை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகின்றனர்.

இதன் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விலையாக ஏற்றுமதிக்கு தகுதியான பழங்களை கிலோ ஒன்று ரூபா 30 வீதம் வழங்கி பழ செய்கையாளாகளை பாதுகாத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி Reviewed by Admin on October 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.