அண்மைய செய்திகள்

recent
-

அத்துமீறிய குடியேற்றம் செய்யவிருந்த பொன்தீவு கண்டல் பகுதிக்கு அதிகாரிகள் விஜயம்.- படங்கள்

கத்தோலிக்க கிராமமான மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் பகுதியில் வேற்று மதத்தவரை குடியமர்த்துவதற்கு மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்த நிலையில் அக்கிராம மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக குறித்த நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் இடம் பெற்று வந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நானாட்டான் பிரதேசச் செயலாளர் இடை நிறுத்தியுள்ளதோடு குறித்த காணிகளுக்குள் எவரும் செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

முருங்கன் பொலிஸார் குறித்த பகுதியில் தற்போது பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று புதன் கிழமை காலை குறித்த பகுதிக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை,வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியர் என்.குனசீலன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இதன் போது நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.சந்திரையா அவர்களும் குறித்த பகுதிக்குச் சென்றிருந்தார்.

ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,நானாட்டான் பிரதேசச் செயலாளர்,மற்றும் கிராம மக்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று இடம் பெறவுள்ளதாகவும்,அதனைத்தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் தெரிவித்தார்.









அத்துமீறிய குடியேற்றம் செய்யவிருந்த பொன்தீவு கண்டல் பகுதிக்கு அதிகாரிகள் விஜயம்.- படங்கள் Reviewed by Admin on October 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.