இலங்கை தூதருக்கு வாசன் கண்டனம்
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று கூறிய இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவஸத்துக்கு மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒடிஸா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரம் செல்வதற்காக வந்த அமைச்சர் வாசன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால் உலக அரங்கில் இந்தியா தனிமைப்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவஸம் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. உணர்வுப்பூர்வமான முக்கியப் பிரச்னையில் இந்தியாவை மிரட்டும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. ஒரு நாட்டின் தூதர் என்ற வரையறைக்குள் மட்டுமே அவர் கருத்து கூற வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கை தூதருக்கு வாசன் கண்டனம்
Reviewed by Author
on
October 26, 2013
Rating:
Reviewed by Author
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment