பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றால் காங்கிரஸுக்கு உகந்தது அல்ல:திருமாவளவன்
இலங்கையில் நடைபெறவிருக்கின் பொதுநலவாய மாநாட்டில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் யாராவது பங்கேற்றால் அது காங்கிரஸ் அரசுக்கு பாரிய பின்னடைவை ஏற்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக அளவில் பெரும் பின்னடைவை அது ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது,
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் தலைவர்களோ, பிரதிநிதிகளோ பங்கேற்க கூடாது என்று தி.மு.க. தலைவர் கலைஞர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதே நேரத்தில் அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானமும் வரவேற்கத்தக்கது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
இந்தியா சார்பில் யாரேனும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றால் அது காங்கிரஸ் அரசுக்கு வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழக அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்றால் காங்கிரஸுக்கு உகந்தது அல்ல:திருமாவளவன்
Reviewed by Author
on
October 30, 2013
Rating:
Reviewed by Author
on
October 30, 2013
Rating:

No comments:
Post a Comment