அண்மைய செய்திகள்

recent
-

தொலைபேசி மிரட்டல் ஊடாக பணம் அறவீடு, பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!

அமைச்சின் செயலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் என்று கூறி தொலைபேசி மூலம் மிரட்டி பணம் சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பேர்து அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 இதுபோன்ற அனாமதேய தொலைபேசி அழைப்பு, பணம் கோரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (சி.சி.டி) பொலிஸாருக்கு இதுவரை 47 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவ்வாறான தொலைபேசி அழைப்பு கிடைக்கப் பெற்றவர்கள் அவர்கள் கோரும் பணத்தை வழங்காமல் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு, அல்லது பொலிஸ் மா அதிபரின் கட்டளையிடும் பிரிவின் 0112 854880 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறியத்தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

தொலைபேசி மிரட்டல் ஊடாக பணம் அறவீடு, பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு! Reviewed by NEWMANNAR on November 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.