வேகக் கட்டுப்பாட்டு குறியீடுகளை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை
கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ஏ 9 வீதியில் வாகனங்களின் வேகக்
கட்டுப்பாட்டுக் குறியீடுகள் இன்னமும் காட்சிப்படுத்தவில்லை எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர் .
வேகக் கட்டுப்பாட்டு அளவுக் குறியீடு காட்சிப்படுத்தப்பட்டால் வாகனங்கள் வேக அளவிற்கு ஏற்ற வகையில் பயணிக்க முடியும் எனவும் இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .
வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகன சாரதிகள் மீது போக்குவரத்து பொலிஸார் சட்டநடவடிக்கை எடுத்தால் வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பம் குறைய வாய்ப்புள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான ஏ - 9 வீதியில் வேகக் கட்டுப்பாட்டு குறியீட்டினை விரைவில் காட்சிப்படுத்தி வாகன விபத்துக்களை தவிர்க்க வழி செய்யுமாறும் கோரியுள்ளனர்
வேகக் கட்டுப்பாட்டு குறியீடுகளை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
November 04, 2013
Rating:

No comments:
Post a Comment