அண்மைய செய்திகள்

recent
-

'சனல் 4" காணொளி ஆராயப்பட வேண்டும் - பொன்சேகா

இசைப்பிரியா உயிருடன், இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டுள்ளமை தொடர்பில் "சனல் 4' வெளியிட்டுள்ள காணொளி  தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று போரை வழிநடத்திய இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

 போரின் இறுதிக் கட்டத்தில் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட போது, இராணுவத் தளபதியாகப் பணியாற்றியவர் சரத் பொன்சேகா. இவர் "சனல் 4' தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியா குறித்த காணொளி தொடர்பில் தெரிவித்துள்ளதாவது: போரின் முடிவில் 12 ஆயிரம் பேர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர்.

 அவர்களில் இந்தப் பெண்ணும் இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. சரணடைந்த 12 ஆயிரம் பேர் பற்றிய ஆவணங்கள் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இருக்க வேண்டும். கடைசியில் அவரை யாரும் பார்த்தார்களா? எப்போது பார்த்தார்கள்? இந்தப் படங்கள் எப்போது எடுக்கப்பட்டவை? போன்ற தகவல்களை ஆராய்ந்தால் தான் அது தொடர்பாக எதையும் கூறமுடியும். இலங்கை இராணுவம் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இருந்தால் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்துத்தான் மறுக்க முடியும் என்றார். 


'சனல் 4" காணொளி ஆராயப்பட வேண்டும் - பொன்சேகா Reviewed by Admin on November 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.