காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான காலப்பகுதி நவம்பர் 30 வரை நீடிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை எழுத்து மூலம் பெற்றுக்கொள்தற்கான காலப்பகுதியை இம்மாதம் 30 ஆம் திகதிவரை நீடித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிகக்ப்பட்டுள்ளதாவமது,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ வினால் விசாரணை ஆணைக்குழுக்களின் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் (393 ஆம் அத்தியாயத்தின்) ஏற்பாடுகளுக்கு அமைய 2013-08-15 ஆம் திகதி 1823/42 ஆம் இலக்க அதிவிஷேட வர்த்தமானியின்படி பின்வரும் ஆணையாளர்கள் மேற்குறிப்பிட்ட ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம
2. திமிங்கு படதுருகே பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன
3. திருமதி மனோ இராமநாதன்
02. இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியான மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் அறிக்கையிடுவதற்கும் இவ்வாணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அ) 1990 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதியில் தொடங்கி 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையில் வடக்கு கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் வசித்து வந்த அனைவரும் தம்மிச்சைக்கு மாறாக தமது வசிப்பிடங்களை விட்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்களா அல்லது காணாமல் போயுள்ளார்களா?
ஆ)அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக அல்லது காணாமல் போனதாக நிரூபிக்கப்படப் போதுமான சான்றுகள்
இ) அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட அல்லது காணாமல் போன ஆட்கள் யார் அத்துடன் சொல்லப்பட்ட ஆட்கள் தற்போது இருக்கின்ற இடங்கள்
ஈ) மேற்சொன்ன எடுத்துச் செல்லப்பட்ட அல்லது காணாமல் போதல்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டிய ஆள் அல்லது ஆட்கள் குறித்த ஒரு கருத்தோட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளத் துணிந்த நம்பத்தகுந்த காரணிகள் அல்லது சான்றுகள்.
உ) அவ்வாறு பொறுப்புக் கூற வேண்டுமெனத் தீர்மானிக்கப்படும் ஆள் அல்லது ஆட்களுக்கெதிராக எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள்
ஊ) அவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் இடம் பெறுவததை தடுப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள்
எ) அவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டதாக அல்லது காணாமல் போனதாக குறிப்பிடப்படும் ஆட்களின் பெற்றோருக்கு வாழ்க்கைத்துணைக்கு தங்கி வாழ்வோருக்கு அரசாங்கத்தின் ஒரு பொறுப்பென்ற வகையில் அளிக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் எவையுமிருப்பின் அத்தகைய நிவாரணங்கள்
03. மேற்குறிப்பிட்ட ஒரு விடயமோ அல்லது சில விடயங்களோ அடங்கலான ஏதாவது முறைப்பாடுகள் சிங்களத்திலோ தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆணைக்குழுவின் செயலாளருக்கு பின் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புவதற்கு யாராவது தனிப்பட்டவருக்கோ அல்லது குழுவினருக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அழைப்பு விடுக்கப்படுகின்றது. (பதிவுத் தபாலில் அனுப்புதல் மிகவும் பொருத்தமானது) சகல முறைப்பாடுகளும் 2013-11-30 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பப்படல் வேண்டும்.
04. ஆணைக்குழுவிற்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் யாவும் பரீசிலனை செய்யப்பட்ட பின்னர் உரிய நபர் / நபர்கள் அல்லது அமைப்புக்கள் வாய் மூல விசாரணைகளுக்காக அழைக்கப்படுவதுடன் முறைப்பாட்டாளர்களின் வசதிக்கு ஏற்ப மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவையாளர் அலுவலகம் அல்லது வேறு பொருத்தமான ஒரு இடத்தில் விசாரணை நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திகதி மற்றும் இடம் என்பன உரிய காலத்தில் அறிவிக்கப்படும்.
05. இரகசியமான முறையில் சாட்சி அளிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்படும்.
06. விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் இந்த ஆணைக்குழுவிற்கும் பொருந்தும் என்பதை இத்தால் தெரிவிக்கின்றேன்.
ஆணைக்குழுவின் கட்டளைக்கு அமைய
எச்.டப்ளிவ். குணதாச செயலாளர்
முகவரி
செயலாளர்
காணாமற் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு
இல.9/8, சுரனிமல இடம்,
கொழும்பு-06
தொலைபேசி இல. 011 2199944
தொலைநகல் இல.011 2199944
காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை அனுப்புவதற்கான காலப்பகுதி நவம்பர் 30 வரை நீடிப்பு
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:


No comments:
Post a Comment