மன்னாரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு.
மன்னார் பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நேற்று ; திங்கட்கிழமை மாலை முதல் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் நாளை 27 ஆம் திகதி புதன் கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள நிலையில் மன்னார் பனங்கட்டுக்கோட்டு பகுதியில் உள்ள எமிழ் நகர் கிராமத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு(டவர்) கோபுரத்தில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இனம் தெரியாதவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய கொடியான புலிங்கொடியினை ஏற்றியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த புலிக்கொடி படைத்தரப்பினரினால் உடனடியாக அகற்றப்பட்டது.
இந்த நிலையில் மாவீரர் தினத்தையொட்டி மன்னார் பகுதியில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலிக்கொடியினை ஏற்றிவிடக்கூடாது என்ற நோக்கில் குறித்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் உப்புக்குளம் மூர்வீதி பனங்கட்டுக்கோட்டு பட்டித்தோட்டம் எருக்கலம் பிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கே இவ்வாறு பாதுகாப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு.
Reviewed by Author
on
November 26, 2013
Rating:
Reviewed by Author
on
November 26, 2013
Rating:


No comments:
Post a Comment