அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி ஆரம்பம்.[படங்கள் ]

மன்னார் பனங்கட்டிக்கொட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்களான திரு திருமதி மருசலின்
அந்தோனியப்பிள்ளை பியூஸ்லஸ் அவர்களின் ஞாபகர்த்தத்திற்கான வடக்கு - . கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப்போட்டி இன்று வெள்ளிக்கிழமை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது .

மன்னார் பனங்கட்டிக்கொட்டு புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கினால் குறித்த உதைப்பந்தாட்டப்போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது .

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 30 விளையாட்டுக்கழகங்கள் குறித்த போட்டியில் கலந்து கொள்ளுகின்றனர் .

இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெறும் .

இன்று காலை 10 மணியளவில் குறித்த விளையாட்டுப்போட்டி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது .

இதன் போது பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வினோ நோகராதலிங்கம் , வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி வி . சத்தியலிங்கம்,வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பனிப்பாளர் எம் . எம் . சியான் இ மன்னார் நகர சபை தலைவர் எஸ் . ஞானப்பிரகாசம் ,நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ் லெம்பேட், அருட்தந்தை அகஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர் .












































மன்னாரில் வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி ஆரம்பம்.[படங்கள் ] Reviewed by Author on November 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.