மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளருக்கு கொலை மிரட்டல்.
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை சென்ற இனம் தெரியாத குழுவினர் அவருக்கு தொலைபேசியூடாக அச்சுருத்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக எஸ்.சுனேஸ் சோசை மேலும் தெரிவிக்கையில்;,,,,
கொழும்பில் உள்ள நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளுவதற்காக நான் நேற்று(20-11-2013) புதன் கிழமை இரவு மன்னாரில் இருந்து கொழும்புக்குச் சென்றேன்.
இந்த நிலையில் மன்னார் பெற்றாவில் உள்ள எனது வீட்டிற்கு முன் வந்த சிலர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.11 மணியளவில் எனக்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னை சி.ஐ.டி என அறிமுகப்படுத்திய ஒருவர் என்னை உடனடியாக வீட்டை விட்டு வெளியில் வருமாறு அழைத்தனர்.
நான் வரமாட்டேன் என கூறினேன்.இதன் போது குறித்த நபர் என்னுடன் வீட்டிற்கு முன் நின்று தொலைபேசியில் கதைப்பதை எனது மனைவி அறிந்து கொண்டார்.
குறித்த நபர் என்னை பல தடவை எச்சரித்ததாகவும்,இறுதியாக நானும் அருட்தந்தையர்களான நேரு செபமாலை அகியோர் மக்களை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டினர்.
இதன் போது உன்னை எப்பவோ தூக்க வேண்டியது தப்பிவிட்டாய் என கூறி எனது வீட்டுக்கதவை தட்டி சென்றனர்.
-இதன் போது எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும்
வீட்டில் தனிமையாக இருந்துள்ளனர்.
-இது தொடர்பாக நாளை மன்னாருக்கு
வந்தவுடன் இந்த அச்சுறுத்தல் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் எஸ்.சுனேஸ் சோசை மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளருக்கு கொலை மிரட்டல்.
Reviewed by Author
on
November 22, 2013
Rating:
Reviewed by Author
on
November 22, 2013
Rating:


No comments:
Post a Comment