பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேறியோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க திட்டம்
முன்வந்துள்ள ஜசாக் நிறுவனம் யு . எஸ் . எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் மீள்குடியேறிய மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான வள்ளம் இ வலை இ இயந்திரங்கள் போன்ற மீன்பிடி உபகரணங்களை வழங்கவுள்ளது .
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திலுள்ள கிளாலி இ புலோப்பளை இ அறத்திநகர் இ சங்கத்தார்வயல் ஆகிய நான்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களில் அங்கத்தவர்களாக இருக்கும் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு மீன்பிடி உபகரணங்கள் இல்லாமையால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுக் காணப்படுகின்றனர் .
இவர்களின் பரிதாபகரமான நிலை குறித்து பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இ கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளின் உதவியை நாடியதைத் தொடர்ந்து திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலருடன் இணைந்து எடுத்துக்கொண்ட நடவடிக்கையின் பயனாக ஜசாக் நிறுவனம் யு . எஸ் . எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒரு கோடி ரூபா பெறுமதியான வள்ளம் இ வலை இ இயந்திரங்கள் ஆகியவற்றை 50 வீத மானியமாகவும் இ 50 வீத சுழற்சி முறையிலான கடனடிப்படையிலும் வழங்க முன்வந்துள்ளது .
இந்த நிலையில் கிளாலி கடற்றொழிலா ளர் கூட்டுறவுச்சங்கத்திற்கு 9 தும்புக்கண்ணாடியிலான வள்ளங்களும் இ இயந்திரங்களும் இ புலோப்பளை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்திற்கு 2 தும்புக்கண்ணாடியிலான வள்ளங்களும் இயந்திரங்களும் இ அறத்திநகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 4 தும்புக்கண்ணாடியிலான வள்ளங்களும் இயந்திரங்களும் இ சங்கத்தார்வயல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 12 தும்புக்கண்ணாடியிலான வள்ளங்களும் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன .
இவற்றுக்கான பயனாளிகளைத் தெரிவுசெய்வதில் கடற்றொழிலாளர் சமாசம் தற்போது ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேறியோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க திட்டம்
Reviewed by Author
on
November 20, 2013
Rating:

No comments:
Post a Comment