அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொலிசாரின் ஏற்பாட்டில் பெரியகடையில் சிவில் அமைப்புகளின் கூட்டம்


மன்னார் பெரியகடை சிவில் அமைப்புகளின் கூட்டம் நேற்று மாலை பெரியகடை பொது மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டம் மன்னார் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஷர தளுவத்த தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் பெரியகடை  சிவில் அமைப்புகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதனை தீர்ப்பதற்கான வழிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது பலகோரிக்கைகள் சிவில் அமைப்புகளினால் முன்வைக்கப்பட்டது. குறித்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த மன்னார் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஷhர தளுவத்த குறித்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதன் போது சிவில் அமைப்பைச் சேர்ந்த நபர்ஒருவர் மன்னார் பெரியகடை பகுதியில் சில வீதிகள் மின்விளக்குகளின்றி  காணப்படுவதால் சமூகவிரோதசெயல்கள் நடைபெறுவதற்கு அது ஏதுவாக அமைவதினால் குறித்த பகுதியில் மின்விளக்குகளை பொருத்தித்தரும்படி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதனை கருத்திற்கொண்ட  மன்னார் பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஷhர தளுவத்த குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட மன்னார் மின்சார சபையின் அத்தியட்சரின் கவனத்திற்கு இதனை கொண்டுவந்தார்.

அதற்கு பதிலளித்த மின்சார சபையின் அத்தியகட்சர் குறித்த பகுதி தமது பிரிவுக்குட்பட்டதல்ல அதற்கு மன்னார் நகர சபைதான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்ததோடு குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டுவரும்படி தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒருவர் இதுகுறித்து தெரிவிக்கையில் அண்மையில் ஊடகங்களில் மன்னார் நகர சபையினால் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . அதன்படி மின்சார சபை இவ்வாறான பகுதிகளில் மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவ் அறிக்கை தெரிவிக்கின்றது அப்படி என்றால் இது தொடர்பாக நாம் யாரிடம் முறையிடுவது என கேள்வி எழுப்பினார்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட பொலிஸ் தலைமை காரியாலய பொறுப்பதிகாரி துஷhர தளுவத்த குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வெகுவிரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் 35 தமிழ் பொலிசார் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் எனவே உங்களது பிரச்சினைகள் தொடர்பாக தமிழில் முறைப்பாடுகளை எந்த தடையுமின்றி மேற்கொள்ள முடியும் என தெரிவித்ததோடு இரவுவேளைகளிலும்  தமிழ் பொலிசார் மக்களின் நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் எனவே எந்த இடையுறுமின்றி மக்கள் தமது முறைப்பாடுகளைசெய்யமுடியும் என தெரிவித்தார்

குறித்த நிகழ்வில் மன்னார் நகரசபை செயலாளர் திரு.பிரிட்டோ, டாக்ரர் கதிர்காமநாதன் ,பெரியகடை கிராம அலுவலர், மதத்தலைவர்கள், உயரரிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

































மன்னார் பொலிசாரின் ஏற்பாட்டில் பெரியகடையில் சிவில் அமைப்புகளின் கூட்டம் Reviewed by Author on November 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.