அண்மைய செய்திகள்

recent
-

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம்

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் பல இடங்களுக்கும் விஜயம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரும் எண்ணிக்கையிலான இராஜதந்திரிகளும், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை காத்திரமான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.மாநாட்டுடன் தொடர்புடைய நிகழ்வுகள் ஹிக்கடுவ, ஹம்பாந்தோட்டை, கண்டி, சிகிரிய போன்ற நகரங்களில் நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாடு ஒழுங்கமைப்பு தொடர்பிலான சகல துணைக் குழுக்களையும் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் Reviewed by Author on November 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.