அண்மைய செய்திகள்

recent
-

யாழில் வாள் வெட்டு: பெண்கள் உட்பட அறுவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் இடம்பெற்ற மோதலில் பெண்கள் உட்பட அறுவர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி நகரிலுள்ள மதுபானசாலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, நண்பர்கள் குழாத்திடையே பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம், அடிதடியாகமாற, அதில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

. இந்நிலையில், பிற்பகல் 5.30 மணியளவில் காயமடைந்தவரின் நண்பர்கள், தாக்குதலை மேற்கொண்டவர்களின் பகுதியான கச்சாய் முருகமூர்த்தி கோவிலடிக்குச் சென்ற வேளையில் இரு குழுக்களுக்குமிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் பெண்கள் உட்பட ஜவர் காயமடைந்தனர்.

 இவர்கள் ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவத்தில், பாலச்சந்திரன் கஜன்(30), அருனந்தி குகதாஸ்(33), சொக்கலிங்கம் கஜன்(23), செல்வராசா அரவிந்தன்(30), உதயச்சந்திரிக்கா (58), பாலசுப்பிரமணியம் செல்வரஞ்சன்(29) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழில் வாள் வெட்டு: பெண்கள் உட்பட அறுவர் வைத்தியசாலையில் Reviewed by Author on November 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.