குடும்பஸ்தர் கைது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளது: பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை
மன்னார் முருங்கன் வாழ்க்கைப்பெற்றான் கண்டல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான திருச்செல்வம் கிரிஸ்துராசா (வயது-31) என்பவரை விசாரனைக்காக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு பின் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-கடந்த 24 ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் மறு நாள் 25 ஆம் திகதி முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்இஇக் கைதினை உறுதிப்படுத்தும் சிட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை மேலும் தெரிவித்தார்.
குடும்பஸ்தர் கைது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளது: பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை
Reviewed by Author
on
November 29, 2013
Rating:

No comments:
Post a Comment