நெறிமுறைகளை மீறிவிட்டார் - கெமரூன் மீது இலங்கை குற்றச்சாட்டு
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூக் இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைக்கான பயணத்தின் போது பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் பலமுறை இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்றிருந்த போது, பிரதான உள்ளூர் தமிழ் அதிகாரியை டேவிட் கெமரூன் ஓரம்கட்டி விட்டதாகவும் தேசிய வருகைப் பதிவேட்டில் ஒப்பமிட மறுத்து விட்டதாகவும் வரவேற்பு நடனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கை வந்த பிரித்தானியப் பிரதமர், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தும், அதுதொடர்பாக இலங்கைக்கு கொடுத்துள்ள காலக்கெடுவும், இருதரப்பு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, டேவிட் கெமரூன் இராஜதந்திர நிறிமுறைகளை மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை இலங்கை சுமத்தியுள்ளது.

Reviewed by Author
on
November 20, 2013
Rating:

No comments:
Post a Comment