மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அஜித் ரோஹண
மன்னார் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு உள்நுழையும் வீதியிலிருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் ஏ – 32 பிரதான பாதையின் திருக்கேதீஸ்வர கோவிலுக்கு உள்நுழையும் வீதியில் நீர்க்குழாய் பொருத்தும் பணிகளில் ஈடுப்பட்டிருந்தவர்களால் மண்டை ஓடுகளும் எலும்புகளும் மீட்கப்பட்டன.
இதனை தொடர்ந்து காவல்துறையினரின் தலையீட்டுடன், மன்னார் நீதவானின் உத்தரவின் பேரில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், தற்போது வரையில் குறித்த இடத்தில் இருந்து 11 மண்டை ஓடுகளும் பல எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்: அஜித் ரோஹண
Reviewed by Admin
on
December 25, 2013
Rating:

No comments:
Post a Comment