சூரியன் FM நிறுவனத்தின் உதவும் கரங்கள் - 2013 -படங்கள்
உதவும் கரங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் சூரியன் FM நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவரும் நலத்திட்ட உதவிகளுக்கு அமைவாக அதன் ஒரு அங்கமாக இம் முறை மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வானது இன்று மாலை (28) சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் மன்னார் வை.எம்.சீ.ஏ மன்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு சூரியன் வானொலியின் உதவி நிகழ்ச்சி முகாமையாளரும் சிரேஸ்ட அறிவிப்பாளரும் ஆகிய எஸ்.என்.டிலான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் செபஸ்தியார் பேராலைய உதவி பங்கு தந்தை அருட்பணி.ரெறன்ஸ் ,வை.எம் சீ.ஏ தலைவர் திரு.யூட் பிகிராடோ மற்றும் அதன் பிராந்திய முகாமையாளர் வ.வசீகரன் மற்றும் சூரிய சொந்தங்களும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
சூரியன் FM நிறுவனத்தின் உதவும் கரங்கள் - 2013 -படங்கள்
Reviewed by Author
on
December 29, 2013
Rating:
No comments:
Post a Comment