அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல கூறியதில் உண்மை இல்லை மன்னார் ஆயர்

அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல, மன்னார் ஆயர் புலி­க­ளுக்குச் சார்­பா­கவே செயற்­பட்டு வந்தார் என்று  என்னைப் பற்றி கூறி­யி­ருப்­பது அத்­த­னையும் அப்­பட்­ட­மான பொய். இவ்­வாறு மன்னார் மறை. மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­டகை தெரி­வித்­ துள்ளார்.

மன்னார் மறை. மாவட்ட ஆயர் புலிக்கு சார்­பா­கவே செயற்­பட்டு வந்தார். அதற்கு உதா­ர­ணங்கள் என்­னிடம் உள்­ள­ன­வெ­னவும் அமைச்சர் கூறி­யி­ருக்­கிறார். அவ்­வாறாயின் அமைச்சர் என்னை அழைத்து விளக்கம் கேட்­கட்டும். நான் சென்று விளக்க தயா­ராக இருக்­கின்றேன். இவ்­வாறு மன்னார் மறை. மாவட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப்பு ஆண்­டகை தெரி­வித்­ துள்ளார்.

மன்னார் மறை. மாவட்ட ஆயர் புலி­க­ளுக்குச் சார்­பா­கவே செயற்­பட்டு வந்தார் என்ற கருத்தை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல அண்­மையில் தெரி­வித்­தமை தொடர்­பா­கவும் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வரும்­படி ஜனா­திபதி கூட்­ட­மைப்­புக்கு விடுத்­துள்ள பகி­ரங்க அழைப்புத் தொடர்­பா­கவும் ஆயர் கருத்து தெரி­வித்த போதே மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

என்னை ஒரு பயங்­க­ர­வா­தி­யென்று காட்டும் தோர­ணையில் மடு மாதா சொரூ­பத்தை பாது­காக்க இரா­ணு­வத்­தினர் கேட்­ட­ போது தான் கொடுக்க மறுத்­த­தா­கவும் அந்த சொரூ­பத்தை விடு­தலைப் புலி­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் அப்­பட்­ட­மான பொய்­யொன்றை கூறி­யி­ருக்­கிறார்.

இந்த விட­யத்தை அமைச்சர் எந்த இடத்­தி­லி­ருந்து அவ­தா­னித்­தாரோ தெரி­ய­வில்லை. இரா­ணு­வத்­தினர் சொரூ­பத்தை தரும்­படி எம்­மிடம் கேட்­க­வு­மில்லை. கேட்­டி­ருந்­தாலும் நான் கொடுத்­தி­ருக்கப் போவ­து­மில்லை. அதே­வேளை விடு­தலைப் புலிகள் சொரூ­பத்தை தரும்­படி எம்­மிடம் கேட்­க­வு­மில்லை.

தற்­போது மடு மாதா­வுக்குப் பொறுப்­பாக இருக்கும் மடு தேவா­லய பரி­பா­லகர் வண. எமி­லி­யா­னூஸ்­பிள்­ளையே அந்த நேரத்தில் மடு தேவா­ல­யத்தின் பரி­பா­ல­க­ராக இருந்தார். கடு­மை­யான ஷெல் தாக்­குதல் கார­ண­மாக அவரும் நமது சாமி­மாரும் உயிரைப் பணயம் வைத்து தமது உயிர் போனாலும் பர­வா­யில்­லை­யென்ற திட­காத்­தி­ரத்­துடன் தேவன்­பிள்ளை பங்கு ஆல­யத்­துக்கு சொரூ­பத்தை எடுத்­துச்­சென்று பாது­காத்­தார்கள். இதுதான் உண்மை.

குறித்த காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­களைச் சந்­திப்­ப­தற்கு நான் மாத்­திரம் செல்­ல­வில்லை. என்­னுடன் அஸ்­கி­ரிய பீடத்தைச் சேர்ந்த வணக்­கத்­துக்­கு­ரிய தேரர் வந்­தி­ருந்தார். இன்னும் சொல்­லப்­போனால் அஸ்­கி­ரிய பீடத்­தேரர் உட்­பட பல ஆயர்மார்களும் சென்­றி­ருந்தோம். தேரர் மடு­வுக்கு வந்து தங்­கி­யி­ருந்தே நாம் எல்­லோரும் ஒன்­றாக சென்­றி­ருந்தோம்.

அமைச்சர் கெஹெ­லி­யவும் ஏனைய சில அமைச்­சர்­களும் என்னைப் பற்றி தவ­றாக கூறு­வ­தற்குக் காரணம், நான்தான் எல்­லா­வற்­றுக்கும் கார­ண­மென அவர்கள் நினைக்­கி­றார்கள். தற்­பொ­ழுது ஆயர் சபையின் கோரிக்­கையும் என்னால் உண்­டாக்­கப்­பட்­ட­தென நினைக்­கின்­றார்கள்.

உண்­மையில் எல்லா ஆயர்­மாரும் ஒன்­று­கூடி, ஆலோ­சனை செய்து ஜெபித்து மனச்­சாட்­சி­யுடன் இக்­க­ருத்­துக்­களை எழுத்து வடி­வுக்கு ஆயர் சபை கொண்டு வந்­தது. இது எனது தனிப்­பட்ட முன்­னெ­டுப்­பென்று சொல்ல முடி­யாது. அதில் உண்­மைத்­தன்­மை­யு­மில்லை.

பேச்­சு­வார்த்தை பேச்­சு­வார்த்­தை­யென்று எத்­த­னையோ முறைகள் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பு சென்­றி­ருக்­கி­றது. முன்­னேற்­றமும் காணப்­ப­ட­வில்லை. நடந்­ததும் ஒன்­று­மில்லை. எவ்­வித பய­னு­மற்றே போயி­ருக்­கி­றது. பேச்­சு­வார்த்­தையின் தோல்­விக்கு கார­ண­மாக இருந்­தது என்­ன­வென்றால் அர­சாங்கம் இது­வரை எச்­சந்­தர்ப்­பத்­திலும் எந்தத் தீர்வைத் தரப்­போ­கின்­றோ­மென்று சொன்­ன­து­மில்லை, வைத்­த­து­மில்லை. அடிப்­ப­டை­யாக வழங்­கக்­கூ­டிய கூறுகள் என்­ன­வென்று கூட அவர்கள் கூறி­யது கிடை­யாது.

அர­சாங்கம் தீர்­வாக என்ன தரப்­போ­கின்­றார்கள் என்­பதை தெரிந்த பின்பே கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்­தைக்கு போக முடியும். அவை தெரி­யாமல் காலத்தைக் கடத்­து­வ­தற்கும் உலகப் போக்கை திசை திருப்­பு­வ­தற்கும் முயற்சி செய்யும் அர­சாங்­கத்தின் அழைப்­புக்­காக பேச்­சு­வார்த்­தைக்குப் போக முடி­யாது, போகவும் கூடாது.

அர­சாங்­க­மா­னது தான் எதை வாக்­கு­று­தி­க­ளாக சர்­வ­தே­சத்­துக்கும் தமிழ் மக்­க­ளுக்கும் கூறி­னார்­களோ அதை முதலில் நிறை­வேற்­றிக்­காட்ட வேண்டும். அப்­பொ­ழு­துதான் நம்­பிக்கை ஏற்­பட முடியும். பேச்­சு­வார்த்­தைக்கு கூட்­ட­மைப்பு செல்ல தயங்­கு­வ­தற்குக் காரணம் கடந்த காலங் ­களில் ஏற்­பட்ட தோல்வி அனு­ப­வங்­க­ளாகும்.

பேச்­சு­வார்த்­தைக்குப் போவ­தற்கு முன் வாக்­கு­று­தி­களை தாருங்கள் என கூட்­டமைப்பு அர­சாங்­கத்தைக் கேட்­ப­தற்கு இதுவே கார­ண­மாகும். அதன் கார­ண­மா­கவே, இந்த பேச்­சு­வார்த்­தையும் தோல்­வி­யி­லேயே முடிந்து போகும் என்ற அவ­நம்­பிக்கை கார­ண­மா­கவே அவர்கள் அழைப்பை ஏற்­க­வில்­லை­யென்று நம்­பு­கின்றோம்.

2012ஆம் ஆண்டு என்ன கார­ணத்­துக்­காக பேச்­சு­வார்த்தை தோல்­வியில் முடிந்­தது? என்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மிகத் தெளி­வா­கவே குறிப்­பிட்­டி­ருந்தார். என­வேதான் பேச்­சு­வார்த்­தை­யென்­பது பேச்­சு­வார்த்­தைக்கு ஆக­வல்ல என்­பதை உணர்ந்து கொண்டு ஒரு நல்ல முடி­வையும் தீர்­வையும் தர வேண்­டு­மென்­பதை சம்­பந்தன் குறிப்­பிட்­டுள்ளார்.

ஆயர் சபை­யினர் கூட்­ட­மைப்­புடன் அர­ சாங்கம் பேச வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது என்­பது உண்­மையே. அவ்­வாறு அவர்கள் கோரிக்கை விட்­டி­ருப்­ப­தனால் அதில் உண்­மை­யுள்­ளதா? இல்­லையா? என்­பதை ஆராய்ந்து தீர்­மானம் எடுக்க வேண்­டிய பொறுப்பு அர­ சாங்­கத்தைச் சார்ந்­தது.

ஆயர் சபையின் கோரிக்­கை­யா­னது நாட்டின் நன்மை கரு­தியே விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதை ஏற்­பதும், ஏற்­காமல் விடு­வதும் அர­சாங்­கத்தைப் பொறுத்­தது. கடந்த நூறு வரு­டங்­க­ளுக்கு மேலாக இப்­பி­ரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக பல்­வேறு தரப்­பினர் முயற்சி செய்து வந்­துள்­ளார்கள்.

ஆனால் இலங்கை அர­சாங்­கங்­களோ எந்­த­வி­த­மான முயற்­சி­க­ளையும் எடுக்­க­வில்­லை­யென்றே கூற வேண்டும். இந்த அர­சாங்கம் மாத்­தி­ர­மல்ல இதற்கு முன்­னைய அர­சாங்­கங்­களும் காலத்தை கடத்தி வந்­ததே தவிர காத்­தி­ர­மான எந்த முயற்­சி­க­ளையும் எடுக்­க­வில்­லை­யென்­பதே உண்மை.

இந்த வர­லாற்றுப் பின்­ன­ணியை அடிப்­ப­டை­யாகக் கொண்டே கத்­தோ­லிக்க ஆயர் மன்றம் குறித்த கோரிக்­கை­களை முன் வைத்­தி­ருக்­கின்­றது. ஆயர் மன்ற கோரிக்கை என்­பது தன்­னிச்­சை­யாக எழுந்த ஒரு விட­ய­மல்ல. மக்­க­ளுடன் கலந்து ஆலோ­சித்­தமை அவர்­களின் கருத்­துக்கள் அபி­லா­ஷைகளின் அடிப்­ப­டை­யி­லேயே ஆயர் ­மன்றம் தமது கருத்தை முன்­வைத்­துள்­ளது.

அந்த வகை­யில்தான் அர­சாங்கம் கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை வைக்க வேண்டும். நல்ல அடிப்­ப­டை­யுடன் வைக்க வேண்டும். இதய சுத்­தி­யுடன் வைக்க வேண்­டு­மென இலக்கை அடைய வேண்­டு­மென்ற நோக்­கத்­துடன் வைக்க வேண்டும். அது­மாத்­தி­ர­மன்றி அடிப்­படைக் கூறுகள் என்ன? என்ன அடிப்­ப­டையில் அர­சியல் தீர்வைத் தரப்­போ­கின்­றீர்கள் என்­பதை அர­சாங்கம் முன்­வைக்க வேண்டும்.

அவ்­வாறு வைக்­கும்­போது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் பூரண சுய­நிர்­ணய உரிமை உடை­ய­வர்கள். ஒரே நாட்டின் கீழ் தங்­களைத் தாங்­களே ஆள்­வ­தற்கு அவர்­க­ளுக்கு உரிமை இருக்­கின்­றது என்ற அடிப்­படைத் தத்­து­வங்­களைக் கொண்­ட­தா­கவே பேச்­சு­வார்த்தை இடம்­பெற வேண்டும்.

அப்­பொ­ழு­துதான் பேச்­சு­வார்த்தை வெற்­றி­யாக நிறை­வேற முடியும். கண்­து­டைப்­புக்­காக கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்­தைக்கு செல்ல முடி­யாது. என­வேதான் ஆயர்­மன்றம் கூறிய விட­யங்­களை அர­சாங்கம் சீர்­தூக்கிப் பார்க்க வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கிறேன்.

ஒற்றையாட்சி முறை­யொன்றின் மூலம் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்க முடி­யாது. 13வது அர­சியல் சாச­னத்­திலும் எல்லாம் பிடுங்கி எடுக்­கப்­பட்டு வெறும்கோதே கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சி­யென்ற பதம் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற தத்­து­வத்தைச் சொல்­லிக்­கொண்­டே­யி­ருக்­ கி­றது. உண்­மையில் இந்த நாடு, ஒரே நாடு என்ற போதிலும் பல்­லின மக்கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பதை அர­சாங் கம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவில்லை.

எனவே இந்த கோட்­பாடு நீக்­கப்­பட வேண்டும். பெளத்­த ­ம­தம்தான் தேசிய மதம் என்ற சிறப்­பான மதிப்பு வழங்­கப்­ப­டக்­ கூ­டாது. எல்லா மதங்­க­ளையும் ஒரு­சேர மதிக்க வேண்டும். ஆனால் இலங்­கையில் நடப்­ப­தென்­ன­வென்றால் எல்லா மதமும் சம­மா­ன­துதான். ஆனால் பெளத்த மதமே பெரி­யது என்ற உயர்வு பாராட்­டப்­ப­டு­கி­றது.

இது விப­ரீ­த­மான நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. அது மாற்­றப்­பட வேண்டும். எல்லா மதங்­க­ளுக்கும் மொழி­க­ளுக்கும் இந்த நாட்டில் சமத்­தன்மை வழங்­கப்­பட வேண்டும். இது கொண்டு வரப்­பட வேண்­டு­மானால் ஒற்­றை­யாட்­சியை வகுத்­துக்­ கொண்­டி­ருக்­கின்ற இலங்கை அர­சியல் அமைப்பு மாற்­றப்­பட வேண்டும்.

இரா.சம்­பந்தன் அவர்­க­ளையும், முதல் அமைச்சர் அவர்­க­ளையும் பேச்­சு­வார்த்­தைக்கு இலங்­கை­ய­ர­சாங்கம் அழைத்­தி­ருந்­தாலும் நாங்கள் அழைத்தோம் அவர்கள் வர­வில்­லை­யென போக்­குக்­காட்­டவே கூட்­ட­ மைப்பு அர­சாங்­கத்தால் அழைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. உண்­மையில் பேச்­சு­வார்த்தை அர்த்­த­முள்­ள­தாக அமை­யு­மென கூட்­ட­மைப்பு நம்­பினால் அவர்கள் பேச்­சு­வார்த்­தைக்கு போக தயங்­க­மாட்­டார்கள்.

சர்­வ­தே­சமும் ஏனை­ய­வர்­களும் கொடுக்­கின்ற அழுத்தம் கார­ண­மா­கவே அர­சாங்கம் பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­கி­றதே தவிர மற்­றும்­படி எதையும் தந்­து­வி­டு­வ­தற்­காக அல்ல. எக்­கா­ர­ணங்­கொண்டும் இந்த அர­சாங்கம் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வைத் தரப் போவ­தே­யில்லை. இதுதான் உண்மை நிலை.

சர்­வ­தே­சத்­தி­லி­ருந்தும் ஏனைய தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் இந்த அர­சாங்­கத்­துக்கு தொடர்ச்­சி­யான அழுத்தம் கொடுக்­கப்­பட்­டாலே தவிர மற்­றும்­படி ஒன்றும் நடக்­கப்­போ­வ­தில்லை. அப்­படி அழுத்தம் வந்­தால்தான் எமக்கு நம்­பிக்கை பிறக்கும்.

எங்­களைப் பொறுத்­த­வரை நாம் ஏமாற்­றப்­பட்ட இன­மா­கவே தொடர்ந்தும் இருந்து கொண்­டி­ருக்­கின்றோம் என்­பதே உண்மை. இலங்­கை­ய­ர­சாங்­க­மா­னது தமது மக்­க­ளிடம் சென்று இப்­ப­டி­யொரு தீர்வை நாங்கள் வழங்­கப்­போ­கிறோம். அதற்கு உங்க­ளு­டைய ஆத­ரவு தேவை­யென்ற விட­யத்தை சிங்­கள மக்­க­ளிடம் சொன்­னதும் கிடை­யாது, கேட்­டதும் கிடை­யாது.

ஒரு சத­வீ­த­மான முயற்­சியைக் கூட இலங்கை அர­சாங்கம் இது­வரை எடுக்க வில்லை. தனி­நாடு தமி­ழர்கள் கேட்­கி­றார்கள். தமிழ் ஈழம் கேட்­கி­றார்கள் என்று விஷக்­க­ருத்தை தம் மக்­க­ளிடம் விதைத்து வரு­கி­றார்­களே தவிர, உண்மை நிலையை சிங்­கள மக்­க­ளிடம் எடுத்துக் கூற எந்த ஒரு பேரின அர­சாங்­கமும் முயற்சி மேற்­கொள்­ள­வில்­லை­யென்றே கூற வேண்டும்.

சர்­வ­தே­ச­மா­னது இலங்­கையில் நிலவி வரும் பிரச்சினைகளை பரிபூரணமாக ஆராய்ந்து அறிந்து முக்கியமாக போர்க்காலத்தில் என்ன குற்றம் இழைக்கப்பட்டது. அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள். மனித உரிமை மீறல்கள் எப்படி நடந்துள்ளன.

மனிதாபிமான ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படவில்லை, போர் வரையறைகள் காப்பாற்றப்படவில்லையென்ற காரணங்களின் அடிப்படையிலேயே சர்வதேசம் இதனைப் புரிந்து கொண்டு இலங்கையில் சமாதான வாழ்வு முறைகொண்டு வரப்பட வேண்டுமென்பதற்காக பாடுபட்டு வருகின்றார்கள்.

சர்வதேசமாகிய தங்களுக்கு ஒரு பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதனாலேயே, இலங்கையில் நிலையான சமாதானமொன்றைக் கொண்டு வரவேண்டுமென்ற நோக்கில் பல்வேறு முயற்சிகளை சர்வதேசம் எடுத்து வருகிறது. இதை தண்டனையாகவோ, தங்களுக்கு கெளரவம் இல்லாமல் போய் விடுமென்றோ இலங்கையரசாங்கம் நினைத்து விடக்கூடாது.

ஆகவேதான் தூரப் பார்வையுடன் நாட்டின் நன்மை கருதி இலங்கையரசு நடந்து கொள்ள வேண்டும். எனவே தான் இலங்கையரசாங்கமானது நாட்டின் எதிர்கால நன்மை கருதி சர்வதேச சமூகத்துடன் ஒத்துப்போக வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என ஆயர் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல கூறியதில் உண்மை இல்லை மன்னார் ஆயர் Reviewed by Admin on December 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.