ஜனவரி தொடக்கம் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட யோசனையின் பிரகாரம் இந்த விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் பதில் தலைவரும் திறன் ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளருமான கலாநிதி தமித்தா டி சொய்சா கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தபாலகங்கள் ஊடாக பெற்றுக்கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டது.
இந்த திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் விவசாய ஓய்வூதியத்திற்கு பங்களிப்புச் செய்த விவசாயிகளின் பட்டியலை புதுப்பிக்கும் நடவடிக்கை மாவட்டங்கள் தோரும் முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி தொடக்கம் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
Reviewed by NEWMANNAR
on
December 01, 2013
Rating:

No comments:
Post a Comment