தமிழர்கள் நீண்ட பயணத்தின் பின் ஆட்சியமைத்துள்ளனர்-வடமாகண சபை உறுப்பினர் சட்டத்தரனி பி.சிராய்வா
வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண அமைச்சர்கள்,மன்னார் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கும் மாபெரும் வரவேற்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்;ந்தும் உரையாற்றுகையில்,,,,,,
மிகவும் தீர்க்க தரிசனமாகவும்,மிகவும் ராஜ தந்திர ரீதியாகவும் வடமாகாண சபை மீது இந்த மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையினை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தையும், இழப்பீடுகளையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கில் மிகவும் உன்னதமான அந்த திட்டத்தினை முன்வைத்து எங்களுடைய முதலமைச்சரின் வழிகாட்டலின் பேரிலே இந்த வடமாகாண சபை புதிதாக பிறந்த ஒரு குழந்தையைப்போன்று நிறுத்தி வைத்து ஆராய்கின்றது.
மக்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபையினை அமைக்க வேண்டும்,அதனூடக பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதேயாகும்.
இதனடிப்படையில் இந்த வடமாகாண சபை நிச்சயமாக பிரச்சினைகளுக்காண நூறுவீதமான தீர்வுகளை கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இன்னும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.
இந்த பிரச்சினைகளை சொல்லிக்காட்டி இந்த பிரச்சினைகளுக்காண தீர்வு காணக்கூடிய இடம் , அது தொடர்பில் பேசக்கூடிய இடம் இதுவல்ல என நினைக்கின்றேன்.
-இன்றைய சூழ்நிலையில் எமது மக்களுடைய எதிர்பார்ப்பு காணாமல் போனவர்கய உறவுகள் திரும்பி வருமா?வீடு இல்லாமல் இருக்கும் எனக்கு வீடு கிடைக்குமா?கடல் தொழிலாளர்கள் எதிர் நோக்கியிருக்கின்ற தென்பகுதி மீனவர்களின் பிரச்சினை,இந்திய மீனவர்களுடைய பிரச்சினை ஆகியவை தீர்த்து வைக்கப்படுமா?படித்திருக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்குமா?இந்த இராணுவம் எமது இடத்தை விட்டு போகுமா?இந்த ஆளுனரின் பிடியில் இருந்து நாங்கள் அனைவரும் மீழுவோமா? அடாவடித்தனமான அமைச்சரின் நடவடிக்கைகள் நிவர்த்தி செய்யப்படுமா? என எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் பல கோணங்களில் இருக்கின்றது.
கௌரவ முதலமைச்சர் அவர்களே உங்களிடம் பணிவான வேண்டுகோள்.எமது மன்னார் மாவட்ட மக்களுக்கு மாதத்திற்கு இரண்டு நாட்களை ஒதுக்கித்தர வேண்டும்.எங்கள் மக்களுடைய இணைப்பை மிகவும் நெருக்கமாக கொண்டு வருவதற்கும்,எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும்,பிரச்சினைகளை நேரடியாக சொல்லுவதற்கும் இந்த இரு தினங்களை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.
இதன் மூலம் இந்த மன்னார் மாவட்ட மக்கள் தமது பிரச்சினைகளை தங்கள் முன் சமர்ப்பித்து நிவாரணம் பெற்றுக்கொள்ள அது இலகுவாக வழிவகுக்கும்.
எனவே முதலமைச்சர் அவர்களும்,அமைச்சர்களும் ,செயலாளர்களும் இணைந்து மாதத்தில் இரண்டு நாட்களாவது இங்கு வந்து மக்களின் குறைகள், பிரச்சினைகளுக்கூறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என கோரிக்கை விடுக்கின்றேன் என தனது உரையில் தெரிவித்தார்.
தமிழர்கள் நீண்ட பயணத்தின் பின் ஆட்சியமைத்துள்ளனர்-வடமாகண சபை உறுப்பினர் சட்டத்தரனி பி.சிராய்வா
Reviewed by Author
on
December 02, 2013
Rating:
No comments:
Post a Comment