சர்வதேச மிரட்டலுக்கு இலங்கை ஒருபோதும் அடிப்பணியாது - ஜீ.எல்.பீரிஸ்
பாராளுமன்றில் இன்று (02) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு வலியுறுத்தும் சர்வதேச நாடுகள் அதனை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என கட்டளையிட முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது உள்நாட்டுக்குள்ளேயே முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை, தேசிய செயற்திட்டம் போன்றவற்றை அரசாங்கம் தற்போது செயற்படுத்தி வருவதாக ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று சமூக புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் கிராமபுர மாணவர்கள் முன்னிலை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இலங்கை குறித்து சீனா வெளியிட்ட கருத்து ஊடகங்களால் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையின் செயற்பாடுகளை சீன முழுமையாக வரவேற்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சர்வதேச மிரட்டலுக்கு இலங்கை ஒருபோதும் அடிப்பணியாது - ஜீ.எல்.பீரிஸ்
Reviewed by Author
on
December 02, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment