மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் 26 கடைகள் திறப்பு
மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கட்டிமுடிக்கப்பட்ட 26 கடைகள் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டன. 
மன்னார் நகரசபையின் ஏற்பாட்டில்  40 கடைகளை உள்ளடக்கிய கடைத்தொகுதி அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு,  முதலில் 26 கடைகள் கட்டிமுடிக்கப்பட்டன.  
மன்னார் வாராந்த சந்தையில் வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரம் செய்யும் வர்த்தகர்களில் மன்னாரை வதிவிடமாகக் கொண்ட வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 26 கடைகளும்  வழங்கப்பட்டன. 
ஒவ்வொரு கடையும்  10 அடி நீளமும் 10 அடி அகலமும் உடையதாக 100,000 ரூபா செலவில் கட்டப்பட்டது.   ஒவ்வொரு கடையும் 500,000 ரூபா படி 26 கடைகளும் 26  வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
முதலில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து  200,000 ரூபா கிடைத்துள்ளது.  மீதிப் பணம் ஒரு வருட அவகசாத்தில் அவர்கள்  செலுத்த வேண்டும் எனவும் மன்னார்  நகரசபைத் தலைர் எஸ்.ஞானப்பிரகசாம் தெரிவித்தார். 
கட்டப்படும் ஏனைய 14 கடைகளையும் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 
மன்னார் நகரசபைத் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில் மன்னார் நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், செயலாளர் லேனாட் பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
மன்னார் தனியார் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் 26 கடைகள் திறப்பு
 Reviewed by NEWMANNAR
        on 
        
January 22, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 22, 2014
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
January 22, 2014
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
January 22, 2014
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment