குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் கணனிமயம்
இலங்கையில் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கும் சுமார் 5 லட்சம் பேரின் கைவிரல் அடையாளங்கள் கணனி மயப்படுத்தப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் குற்றச் செயல்கள் இடம்பெறும் இடங்களில் அடையாளம் காணப்படும் குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்களை சில நிமிடங்களில் பரீட்சித்து பார்க்க முடியும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேவேளை வெளிநாடுகளுக்கு செல்வதற்காக பொலிஸ் சான்றிதழை பெறும் போது கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வது இதன் மூலம் துரிதப்படுத்தப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
மொறட்டுவ, கொழும்பு பல்கலைக்கழங்கங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் ஆகியவற்றின் உதவியோடு இந்த கைவிரல் அடையாளங்களை கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் கைவிரல் அடையாளங்கள் கணனிமயம்
Reviewed by NEWMANNAR
on
January 31, 2014
Rating:

No comments:
Post a Comment