அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மனநல காப்பகப் பிரிவு நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு

வவுனியாவின் முன்னைநாள் உப நகர பிதாவும், புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலையின் மனநல காப்பாக பிரிவைச் சேர்ந்த நோயாளிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

 வைத்திய கலாநிதி சுதாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வவுனியா ஸ்டார் மீடியா பிரியந்தனின் ஒழுங்கமைப்பில் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பொருட்களை வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் வைத்திய கலாநிதி அகிலன் அவர்களிடம் திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கையளித்துள்ளார். 

 இந்நிகழ்வில் தமிழ்மணி அகளங்கன் ஆசிரியர், கோவில்குளம் இந்துகல்லூரியின் முன்னாள் அதிபர் சிவஞானம், கவிஞர் மாணிக்கம் ஜெகன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த சதீஸ் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்களான சந்திரன், சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.





வவுனியா மனநல காப்பகப் பிரிவு நோயாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைப்பு Reviewed by NEWMANNAR on January 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.