யாழ்.பல்கலை மாணவியின் சடலம் மீட்பு-2ம் இணைப்பு
யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் 3 ஆம் வருடத்தில் கல்விப்பயிலும் அல்லைப்பிட்டியைச்சேர்ந்த 24 வயதான ரட்ணேஸ்வரன் வித்யா என்ற மாணவி அவருடைய வீட்டிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
2ம் இணைப்பு
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
இன்று காலை வழமை போன்று பத்திரிகை பார்த்த குறித்த மாணவி பெற்றோர் வெளியில் சென்ற சமயம் பார்த்து வீட்டிலுள்ள சுவாமி அறைக்குள் சென்று சுடிதார் துணி உதவியுடன் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகளை காணமல் தேடிச்சென்ற வேளை குறித்த அறையில் தூக்கிலிடப்பட்ட நிலையில் மகளை கண்டு கூச்சல் இட்டனர்.
இதன் போது அயலவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது மாணவியின் உயிர் பிரிந்திருந்தது.
தற்போது வரை சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படாமல் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளது.
இவ்வாறு இறந்தவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவர். கிராம சேவகரின் மகளான இவர் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்முக்குட்டி என அழைக்கப்படும் வித்யா எனும் இம்மாணவி 24 வயதுடையவர். இவர் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தனது பல புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி உள்ளதுடன், இறுதியாக அவர் பதிவேற்றியது முற்றுப்புள்ளி (.) என்று மட்டுமே.
இவர் குறித்து இதுவரை எமக்குக் கிடைத்த தகவலின்படி இவர் கல்வியறிவில் மிகவும் திறமையானவர் என்பதுடன், பல்கலைக் கழகத்தில் எல்லோருடனும் அன்போடு, சகஜமாகப் பழகுபவர் மட்டுமல்லாது இவர் காதல் போன்ற எந்தவித தொடபும் இல்லாதவர் என மாணவர்கள் தரப்பால் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலை மாணவியின் சடலம் மீட்பு-2ம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 20, 2014
Rating:

No comments:
Post a Comment