அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் காணியை சுவீகரிக்க முயற்சி : மக்கள் எதிர்ப்பு

மன்னார் - பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திற்கு சொந்­தமான காணியை கடற்­ப­டை­யினர் அப­க­ரிக்கும் முயற்­சிக்கு அப்­ப­குதி மக்கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை  அப்­ப­கு­திக்கு நில அள­வையை மேற்­கொள்ள சென்­றி­ருந்த நில அள­வை­யா­ளர்­களை வழி­ம­றித்து அங்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்த அளவை பணி­யையும் தடுத்து நிறுத்­தி­யுள்­ளனர். இதனால் அப்­ப­கு­தியில் சற்று பதற்ற நிலை தோற்­று­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை, நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற இச்­சம்­ப­வத்தை தகவல் சேக­ரிக்க சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கடற்­ப­டை­யி­னரால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்டுள்ளனர்.

இது குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பேசாலை புனித வெற்­றி­நா­யகி ஆல­யத்­திற்கு சொந்­த­மான வெட்­டியா குடி­யி­ருப்பு காணியை கடற்­ப­டையின் கஜபா படையணியின் பாது­காப்பு முகாம் அமைப்­ப­தற்­காக அப­க­ரிக்கும் நோக்­குடன் நில அளவை செய்ய வந்­தி­ருந்த அரச நில அள­வை­யா­ளர்­களை வழி­ம­றித்த பொது­மக்­கள்இ பேசாலை உதவி பங்கு தந்தை அருட் தந்தை அருட்­கு­மரன் அடி­க­ளார் வட மாகாண சபை உறுப்­பினர் பிறிமூத் இ­ராய்வா மன்னார் பிர­தேச சபை உறுப்­பினர் உள்­ளிட்டோர் மேற்­படி நட­வ­டிக்­கைக்கு தமது எதிர்ப்­பினை தெரி­வித்து அங்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்த காணி அளவை பணி­யையும் தடுத்து நிறுத்­தி­யுள்­ளனர்.

அங்கு குழு­மி­யி­ருந்த கடற்­ப­டை­யி­னரும் அதி­கா­ரி­களும் அருட் தந்­தை­யு­டனும் பங்கு முக்­கி­யஸ்­த­ரு­டனும் பேச்சு வார்த்தை மேற்­கொண்­டி­ருந்த வேளை அங்கு நின்று கொண்­டி­ருந்த நப­ரொ­ரு­வ­ரு­டைய கைய­டக்க தொலை­பே­சியை கடற்­படை அதி­காரி ஒருவர் பறித்து எறிந்துள்ளமையினால் அங்கு பதற்ற நிலை தோற்­று­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை, இந்­நி­லை­வ­ரத்தை படம் பிடிக்க முற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கடற்­ப­டை­யி­னரால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர்.

அங்கு வருகை தந்த அரச மன்னார் நில அள­வை­யாளர் கே. திலிப்குமார் அரசின் வேண்டுகோளுக்கிணங்கவே இங்கு நில அளவை செய்ய வந்ததாகவும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இது தொடர்பில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் காணியை சுவீகரிக்க முயற்சி : மக்கள் எதிர்ப்பு Reviewed by NEWMANNAR on January 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.