அண்மைய செய்திகள்

recent
-

முசலி-மணற்குளம் கிராமத்தின் உள்ளக வீதியின் அவலநிலலை- படங்கள்

யுத்தத்தின் பின்பு மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முஸ்லிம்கள்  மீள் குடியேறினார்கள் அந்த வகையில் பூ நொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராம மக்கள் 2004 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் மிள்குடியேறினர். 

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் வேண்டுகோளின் பேரில் 51 வீடுகடன் மீள்குடியேறிய கிராமமாக மணற்குள கிராமம் காணப்படுகின்றது இருந்தும் கிராமத்தின் உள்ளக வீதிகள் இன்னும் திருத்த படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் மழைகாலங்களில் பாடசாலை மாணவர்கள் முதியோர்கள் மற்றும் கற்பிணி தாய்மார்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள்.

கடந்த மாதம் முசலி பிரதேச சபை உறுப்பினர்களுக்கு குறிப்பட்ட ஒரு அமைச்சினால் தலா 1000000 ருபா நிதி பொது வேலைக்கு ஒதுக்கிடப்பட்டது இந்த நிதி 7 பிரதேச உறுப்பினர்கள் தங்களின் சொந்த கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக ஒரு சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

முசலி பிரதேசத்தில் மீதியாக உள்ள பல கிராமங்களுக்கு பொது வேலைகள் இடம்பெறாமல் உள்ளது என மணற்குளம் கிராமத்தின் உள்ளக வீதியினை புனர்நிர்மாணம் செய்ய முசலி பிரதேச சபை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் யாராவது நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் எதிர்பார்கின்றார்கள்.



முசலி-மணற்குளம் கிராமத்தின் உள்ளக வீதியின் அவலநிலலை- படங்கள் Reviewed by NEWMANNAR on January 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.