அண்மைய செய்திகள்

recent
-

சமூகமட்டத்திலான அனர்த்தபதிலிருப்பு உபகரணங்கள் வழங்கலும் தொண்டர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் -படங்கள்

இலங்கைசெஞ்சிலுவைச் சங்கத்தின் சமூதாயமீள் அபிவிருத்திக்கான ஒருங்கிணைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் கீழ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமங்களுக்கான சமூகமட்டத்திலான அனர்த்தபகுதிலிருப்பு உபகரணங்கள்; வழங்கலும் தொண்டர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும். நடைபெற்றது இன்றுகாலை 11 மணியளவில் கிளைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக மங்களவிளக்கேற்றும் வைபவம் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்டக்கிளையின் கிளைநிறைவேற்றுஅதிகாரியினால் வரவேற்புரைநிகழ்த்தப்பட்டதுடன் திட்டம் சம்மந்தமாகதிட்ட இணைப்பாளர் அவர்களினால் கூறப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. எம் வை எஸ் தேசப்பிரிய அவர்கள் கலந்துகொண்டதுடன் மடுஇமாந்தைமேற்கு உதவி அரசாங்க அதிபர்களும் அனர்த்தமுகாமைத்துவ அலுவலர்கரும் அரகாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டனர்,

இலங்கைசெஞ்சிலுவைச்சங்க கௌரவதலைவர் செயலாளர் உட்படநிர்வாக உறுப்பினர்களும் மடு மாந்தைமேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த அலகு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களும் கலந்துசிறப்பித்தனர். இதில் மிகமுக்கியவிடயமாக இத்திட்டத்தில் சிறப்பாகசெயற்பட்ட தொண்டர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிகௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்கள் உரையாற்றுகையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கசேவையினைபாராட்டியதோடு இன்றையநிகழ்வில் பங்குபற்றியதன் மூலம்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முழுமையான செயற்பாடுகள் பற்றி அறிந்துகொண்டதாக கூறினார்.

 அவர் மேலும் கூறுகையில் 'இத்திட்டத்திற்கான நிதிஉதவியானது வௌ;வேறுநாடுகளிலிருந்துமக்கள் வழங்கிய கூட்டுநிதியாகபெறப்பட்டதுஎன்பதையும் இலங்கைசெஞ்சிலுவைச் சங்கம் அதனைமிகவும் பொருத்தமானமுறையில் மக்களிடையேகொண்டுசென்றுள்ளது என்பதனை பயனாளிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு தெரிவித்ததுடன் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களை பொருத்தமான முறையில் பாவித்து மற்றவர்களும் எதிர்காலசந்ததியினரும் பாவிக்கத்தக்கமுறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக துணையாக இயங்க வேண்டுமென்றகோரிக்கையினைமுன் வைத்தார்
அதன் பின்னர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தி;ன் கௌரவதலைவர் திரு.ஜே ஜேகெனடி அவர்கள் தனது உரையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அலகுமற்றும் பிரிவு செயற்பாடுகள் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படவேண்டும் என்பதனையும் அவ்வாறு செயற்படுத்தப்படாதசந்தர்ப்பத்தில்; சமூகமட்டத்திலான அனர்த்தபதிலிருப்புஉபகரணங்களமீளப்பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பிரதேச மட்டங்களின் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களுக்கு இந்தப்பொருட்களைப்பாவிப்பதோடு இதற்கான பூரணப்படுத்தப்பட்ட ஒரு அறிக்கையினை கிளைக்கு உடனடியாக கிடைக்கப்பெறச் செய்யவேண்டுமென்பதனை பிரிவு மற்றும் அலகுத்தலைவர்களுக்கு வலியுறுத்திக் கூறினார். அதன் பின்னர் சமூக அவசரச மூகமட்டத்திலான அனர்த்தபதிலிருப்புஉபகரணங்கள் உரியபிரிவினருக்கு அதாவது மாந்தை மேற்கு பிரதேச பிரிவில் இலுப்பக்கடவைபாலியாறு ஆகியகிராமங்களுக்கும் மடு பிரதேச பிரிவில் பெரியமுறிப்பு கிராமத்திற்கும் கையளிக்கப்பட்டது.
 இறுதியாக கௌரவ செயலாளர் திட்டத்தினை நடைமுறைப்படுத்திய நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள் குறிப்பாக மாந்தைமேற்கு மடு உதவி அரசாங்க அதிபர்களுக்கும் பயனாளிகளுக்கும் தெரிவித்தார்.





































































சமூகமட்டத்திலான அனர்த்தபதிலிருப்பு உபகரணங்கள் வழங்கலும் தொண்டர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் -படங்கள் Reviewed by Author on January 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.