சீரான போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறு மன்னார் மக்கள் கோரிக்கை
மன்னாரில் இருந்து நானாட்டான் நோக்கிச் செல்லும் அரச பஸ்கள் தொடர்ச்சியாக வீதியின் இடை நடுவே நின்று விடுவதாகவும் இதனால் குறித்த பஸ்ஸில் போக்குவரத்துச் செய்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து நாளாந்தம் காலை 7.40 மணிக்கு மன்னாரில் இருந்து வங்காலையூடாக நானாட்டான் செல்லுகின்றமை வழமை.
இந்த நிலையில் கடந்த பல நாற்கலாக குறித்த நேரத்திற்கு புறப்படும் அரச பஸ் மன்னார் பிரதான பாலம், தள்ளாடி வீதி போன்றவற்றில் திடீரென நின்று விடும்.
பஸ்ஸில் உள்ள பழுது காரணமாகவே குறித்த பஸ் இடை நடுவே நின்று விடுகின்றது.
இதனால் மன்னார் மற்றும் வங்காலையில் இருந்து நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச, தனியார் திணைக்களங்களுக்கு கடமைக்காக செல்வோர் மிகவும் தாமதித்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமையும் இடம் பெற்றுள்ளது.
நேற்று காலை 7.40 மணியளவில் மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து வங்காலையூடாக நானாட்டான் நோக்கி பேரூந்து சென்றது. எனினும் குறித்த பஸ்ஸில் உள்ள பழுது காரணமாக தள்ளாடி வீதியில் நின்று விட்டது.
பின் நீண்ட நேரம் வரை காத்திருத்து குறித்த பஸ்ஸை இயங்க வைத்து வங்காலை சென்று அங்குள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு நானாட்டான் சென்றது.
மன்னார் சாலையில் உள்ள பஸ்கள் பல பாவனைக்கு உற்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல பஸ்கள் பயணிகளினால் தள்ளப்பட்டு இயங்கச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மன்னார் சாலை அதிகாரிகள், இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வடமாகாண முகாமையாளர் ஆகியோர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி தமக்கான போக்குவரத்துக்கு உதவ வேண்டும் என மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீரான போக்குவரத்தை ஏற்படுத்தி தருமாறு மன்னார் மக்கள் கோரிக்கை
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
Reviewed by Author
on
January 08, 2014
Rating:

No comments:
Post a Comment