101 நாள் விசேட வேலைத் திட்டம் - அமைச்சர் டெனிஸ்வரன்
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்பா.டெனிஸ்வரன் அவர்கள் வட மாகாண மக்களின் போக்குவரத்து ஒழுங்குகளை செம்மைப்படுத்தும் நோக்கோடு 101நாள் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 01-02-2014 முதல் ஆரம்பிக்க உள்ளதாகதெரிவித்தார்.
அவர் அத்திட்டம் தொடர்பில் fUj;J தெரிவிக்கையில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள தனியார்பேரூந்து உரிமையாளர் சங்கங்களினதும் பார ஊர்தி உரிமையாளர் சங்கங்களினதும் முச்சக்கரவண்டி உரிமையாளர்சங்கங்களினதும் நிர்வாக சபைகள் கலைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைகள் உருவாக்குவதோடு,தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கங்களுக்கான வட மாகாண இணையம் ஒன்றினை உருவாக்குவதோடு அனைத்து சங்கங்களும் புனரமைக்கப்படும் என்றும் இதன் மூலம் இதுவரை இருந்து வந்த நிர்வாகச் சிக்கல்கள் நீங்கும் என்றும் வட மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபைக்கான சட்ட மூலத்தை உருவாக்குவதும் அதநோடொத்த பலவிடயங்களை நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்தோடு இவ்வாறான அமைப்புக்களை உருவாக்குவதன் மூலம் வட மாகாண மக்களுக்கு மிகவும் வினைத்திறனுள்ளபயன்பாடுமிக்க போக்குவரத்து சேவையினை வழங்க முடியும் என்றும் கூறியதோடு எதிர்காலத்தில் வீதிப்போக்குவரத்து தொடர்பாக இருக்கின்ற ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைஎடுக்கப்படுமெனவும் சிலவேளைகளில் குற்றத்தின் தன்மைக்கேற்ப போக்குவரத்துக்கான வீதி அனுமதிப் பத்திரம்ரத்துச் செயப்படும் என்றும் எச்சரிக்கின்றார்.
101 நாள் விசேட வேலைத் திட்டம் - அமைச்சர் டெனிஸ்வரன்
Reviewed by Author
on
January 29, 2014
Rating:
Reviewed by Author
on
January 29, 2014
Rating:

No comments:
Post a Comment