திருக்கேதீஸ்வரத்தில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 52ஆக உயர்வு -படங்கள்
மன்னார் திருகேதீஸ்வர பகுதியில் மேற்கொள்ளப்படும் மனித புதை குழி அகழ்வு பணி இன்று 28.01.2014 செவ்வாய்க்கிழமை காலை 16வது தடவையாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் அனுராதபுர சட்ட வைத்;திய நிபுணர் டி.எல்.வைத்தியரட்ண உள்ளிட்ட விசேடகுழுவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
குறித்த மனித எச்சங்கள் தொடர்பான விசாரணையினை மேற்கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனித எச்சங்களுள்ள பகுதியில் 2மீற்றர் அளவு விஸ்தரிக்கப்பட்டு மனித எச்சங்களை தேடும் பணியின்போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 52ஆக உயர்வடைந்துள்ளது.
எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மhதம் 20ம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரப்பகுதியில் குடிநீர்வினியோகத்திற்காக மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு செல்லும் பாதையில் குழாய்கள் நிலத்திற்கு அடியில் பொருத்துவதற்கான வேலையில் இடம் பெற்ற வேளை குறித்த பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து குறித்த பகுதியில் மனித எச்சங்கள் தேடி கண்டுபிடிக்கும் பணிகள் மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் அவர்களின் உத்தரவிற்கமைவாக இன்று 16 வது தடவையாக குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதன்போது நேற்று திங்கள்கிழமைவரை மொத்தமாக 47 எலும்புக்கூடுகள் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நீதிபதியின் உத்தரவிற்கமைவாக இன்று செவ்வாய்க்கிழமை காலை 16வது தடவையாக எச்சங்களை தேடும் பணி 8:30 மணிமுதல் 2;.30 மணிவரை நடைபெற்றபோது மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று குறித்த மனித எச்சங்கள் உள்ள பகுதியிலிருந்து மேலும் ஒரு எலும்புக்கூடு பகுப்பாய்விற்கென நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு பெட்டியில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏற்கனவே நேற்று மனித எலும்புக்கூடுகள் அடைக்கப்பட்ட 15 பெட்டிகள் பாதுகாப்பாக மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் ஒரு பெட்டியில் மனித எச்சங்கள் பொதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மொத்தமாக 16 பெட்டிகளில் 18 எலும்புக்கூடுகள் பொதிசெய்யப்பட்டு பகுப்பாய்விற்கென எடுக்கப்பட்டுள்ளது.
இன்நிலையில் நீதிபதியின் உத்தரவிற்கமைவாக நாளை மனித எச்சங்களை தேடும் பணி தொடரவுள்ளது.
திருக்கேதீஸ்வரத்தில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 52ஆக உயர்வு -படங்கள்
Reviewed by Author
on
January 28, 2014
Rating:
No comments:
Post a Comment