திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுப்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான விவகாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி பகுதிக்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை(24.01.2014) காலை 8:30 மணியளவில் 13வது தடவையாக மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையிலான நிபுணர்குழு குறித்த பகுதியில் மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதியிற்கு இன்று காலை வந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் அதிகாரிகள்; மனித புதைகுழி தொடர்பான முதல் கட்ட விசாரணையியை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதியின் கிராம அலுவலகர் மற்றும் அனுராத புர சட்ட வைத்திய நிபுணர் ஆகியோரிடம் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மனித புதைகுழியில் இது வரையில் 43 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இன்று வெள்ளிக்கிழமை குறித்த மனித புதை குழியில் மனித எச்சங்களை தேடிகண்டுபிடிக்கும் பணியின் போது எது வித மனித எலும்புக்கூடுகளும் மீட்கப்படவில்லை.
எனினும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு அவை இது வரை 10 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெட்டிகளில் பொதிசெய்யப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்ட நிதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைவாக குறித்த மனித எச்சங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மனித எச்சங்களை பாதுகாப்பான முறையில் வைக்க தகுந்த இடத்தை அடையாளப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை சனிக்கிழமை மனித எச்சங்களை தேடி கண்டுபிடிக்கும் பணி தொடரவுள்ளது.
திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னெடுப்பு
Reviewed by Author
on
January 24, 2014
Rating:
No comments:
Post a Comment