காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவும்: ரெப்பிடம் அனந்தி எடுத்துரைப்பு
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் இரண்டு முறை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையென. அத்துடன் காணாமற்போனோர் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கவேண்டும் என ஸ்டீபன் ஜே. ரெப்பிடம் எடுத்துக் கூறியதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப்பிற்கும் அனந்தி சசிதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று மணிக்கு யாழ் கிறின்கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அனந்தி சசிதரன்,
இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றி இதுவரையிலும் எதுவித தகவல்களும் இல்லையெனவும். தொடர்ந்தும் காணாமற் போதல், கடத்தல் என்பன இடம்பெற்று வந்தது எனவும் அவரிடம் தெரிவித்தேன்.
காணாமற்போனோர் பற்றிய சரியான தீர்க்கமான நடவடிக்கைகளை அமெரிக்க எடுக்கவேண்டுமென தெரிவித்திருந்தேன்.
அத்துடன், போர்க்குற்ற விசாரணைக்கு அப்பால் இன்றைய நிலையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், வலி.வடக்கில் கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் 7500 க்கும் அதிகமான குடும்பங்கள் இதுவரையிலும் மீள் குடியேற்றப்படாமல் அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதினை ரெப்பிற்கு எடுத்துக் கூறினேன்.
காணாமற்போனோர் பற்றிய தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவும்: ரெப்பிடம் அனந்தி எடுத்துரைப்பு
Reviewed by Author
on
January 09, 2014
Rating:
Reviewed by Author
on
January 09, 2014
Rating:

No comments:
Post a Comment