ஐநா மேற்பார்வையில் மன்னார் புதைகுழி விசாரணை: பிரேரணை நிறைவேற்றம்
மன்னார் புதைகுழி தொடர்பான விசாரணைகளும் பகுப்பாய்வுகளும் ஐ.நா வின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கண்ணீருடன் பிரேரணை ஒன்றினை முன்வைத்தார். வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற ஜந்தாவது அமர்வில் பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்து இருந்தார்
மேலும் தெரிவிக்கையில்
ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இனவழிப்புக்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கும் வகையிலும் அரச அதிபர்களின் புள்ளிவிபரப்படி காணாமல் போனவர்களின் 146679 நபர்களின் நிலையினை ஆராயும் வகையிலும் அரசின் தற்போதைய நீதியற்ற கணக்கெடுப்புக்கு மாறாக மாகாண சபையால் சர்வதேசத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு உண்மை கணக்கெடுப்பினை சர்வதேச சமூகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
இம் மாநாட்டிற்கு இனவழிப்பிற்கு ஆதாரமான சாட்சி ஆதாரங்களோடு எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அங்கு சென்று சர்வதேச நாடுகளின் மனித உரிமை ஆர்வாலர்களின் செயற்பாட்டுக்கும் சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் மனித உரிமை செயற்பாட்டுக்கு வலு சேர்க்க வேண்டும்.
மன்னார் மாந்தை மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஐநா குழுவின் மேற்பார்வையுடனும் அக்குழுவின் உதவியுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரேரணையை முன்வைத்தார்.
இந்த பிரேரணை சபையில் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐநா மேற்பார்வையில் மன்னார் புதைகுழி விசாரணை: பிரேரணை நிறைவேற்றம்
Reviewed by Author
on
January 28, 2014
Rating:
Reviewed by Author
on
January 28, 2014
Rating:

No comments:
Post a Comment