தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு லிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிவராத்திரி தின விழா
மன்னார் 2ம் கட்டை தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை 27.02.2014 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு சிவராத்திர விரதம் விசேட அபிஷேகத்துடன் வில்வ அர்ச்சனை மற்றும் விஷேட பொங்கலும் நடைபெறவுள்ளதாக ஆலய பிரிபாலன சபையினர் தெரிவுத்துள்ளனர்.
மேலும் அனைவருக்கும் லிங்கேஸ்வர பெருமானின் அருள்கிடைக்க நாளை பிரார்த்திக்கவுள்தாகவும் தெரிவித்துள்ளனர்.
;.
தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு லிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிவராத்திரி தின விழா
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:

1 comment:
இந்த லிங்கேஸ்வரர் தேவஸ்தானம் தொடர்பில் உள்ள பிரச்சனை ஏன் இன்னும் கண்டுகொள்ளப்படவில்லை??????குறித்த கோவில் ஏன் இங்கு அமைந்து என்று குற எனக்கு இது இடம் இல்லை ஏன் எண்ணுகிறேன்.குறித்த கோவில் நடு வீதியில் அமைந்துள்ளது .இக்குறித்த வீதியானது தலை மன்னார் பிரதான வீதியோடு இணைகிறது.இந்த சந்தி மூலமாக மாணவர்கள்,அலுவலகம் செல்வோர்,மேலும் பலதரப்பட்ட தேவைகள் நிமிர்த்தம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.ஆனால் இக் கோவில் நடு வீதியில் உள்ளதால் அனைவரும் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.மேலும் இக் குறித்த வீதி ஊடாக வாகனங்கள் செல்ல முடியாமல் நெடுந் தூரம் சுற்றி இலக்கை அடைய வேண்டியுள்ளது.மேலும் வாராந்தம் இக் குறித்தத் கோவிலில் பூஜை செய்யும் காரணத்தால் நடந்து செல்லவோ,துவிச்சக்கரவண்டியில் செல்லவோ இடையயூறாக உள்ளது.எமது நம்பிக்கை ஏனையோருக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.எனவே இவ்வாறான ஒரு இடறலை உண்டாக்கும் இக் கோவிலை வேறு இடத்திற்கு மாற்றினால் அது பலருக்கும் பல நன்மை பயக்கும்.இதனை இந்த இணையத்தளம் வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம் அதை விட்டு விட்டு...............பிரசுரிக்கும் செதிகளை ஆராய்ந்து பிரசுரிப்பது நல்லது.ஒருவர் பிரசுரிக்கச் சொல்கிறார் என்பதற்காக பிரசுரிக்கக் கூடாது.அண்மைக் காலமாக உங்கள் செய்திகள் பக்கச் சார்பானதாக அமைந்துள்ளது.இது உங்கள் மேல் உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.
Post a Comment