வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம் - றிசாத் பதியுதீன் - படங்கள்
வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடும் முயற்சியும்,இலட்சியமுமே கல்வியாளர்கள் உருவாகுவதற்கான அடிப்படை மூலதனங்களாகும் என்றும் கூறினார்.
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட காசிம் சிட்டி றிசாத் பதியுதீன் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன பாடசாலை அதிபர் எம்.நஜ்மி தலைமையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது –
இடம் பெயர்வுகளாலும்,இயற்கை அழிவுகளாலும் பாதிப்புக்குள்ளான சமூகத்தின் எதிர்காலம் தொடர்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்திவருகின்றோம்.பாடசாலைகளில் கல்வியினை மேற்கொள்ளும் மாணவர்கள் எவ்வினத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும்,அவர்களுக்கு தேவையானதும் கல்வி ,இதனை பிரித்து ஆரம்ப காலத்திலேயே இன ரீதியான கற்கைகளை அவர்களுக்கு ஊட்டக் கூடாது.
இந்த பாடசாலை இன்று மிகவும் சிறந்த முறையில் நடைபெறுவது தொடர்பில் பணிப்பாளர் அவர்கள் தெரிவி்த்தார்கள்.மாணவர்களது பணி கற்பது மட்டும் தான்,அத்தோடு ஒழுக்க விழுமியங்களை உரிய முறையில் பின்பற்றுவதும்,கல்வி என்பதும் ஒரு வணக்கம் தான்.அதனை இறை அச்சத்துடன் முன்னெடுக்கும் போது அதற்காக ஈருலகிலும் நன்மை கிடைக்கும்.வெறும் உலகத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு கற்பதானது தமது இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமே பிரயோசணம் தரக் கூடியதாக இருக்கும்.
பாடசாலைகளில் கல்வியினை வழங்குகின்ற போது மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் ஊட்ட வேண்டும்.இன்று எமக்கு தேவையாகவுள்ளவர்கள் துறை சார்ந்தவர்கள்,அவர்கள் உருவாகுகின்ற போது,அவர்கள் மூலமாக இன்னும் சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும்.
அரசியல் வாதியாக இருக்கின்ற எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்பை நாங்கள் சரியாக செய்யாத பட்சத்தில் இறைவனின் கேள்விகளில் இருந்து எங்களால் ஒருபோதுாம் தப்பித்துக் கொள்ளமுடியாது.அதே போல் ஒவ்வொருவரும் சமய பற்றுடன்,தமது கடமைகளை சரிவரச் செய்வார்களெனில் மற்றையவர்களின் உணர்வுகளை புரிந்து அதற்கு மதிப்பளித்து செயற்படும் மக்களாக மா முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,எம்.ஜனுாபர்,மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம் - றிசாத் பதியுதீன் - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 13, 2014
Rating:
No comments:
Post a Comment