மகா சிவராத்திரி தினத்தன்று கேலிக் கூத்துகள் நடத்துவதை தவிருங்கள். இந்து அமைப்புக்கள் கோரிக்கை.
மகா சிவராத்திரி தினத்தன்று இந்து ஆலயங்கள் மற்றும் இந்து மக்கள் வாழும் பிரதேசங்களில்கேலிக் கூத்துகள் நடத்துவதை தவிர்த்து , சமயம் சார்ந்த விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்குமாறு கிழக்கிலுள்ள இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன .
மட்டு . அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் சிவராத்திரி தினத்தன்று விரதகாரர்கள் கண்விழித்து இருப்பதற்கு பிரதேச அமைப்புக்களினால் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்வுகள் , பக்தி படங்கள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவது வழமையாகும் .
இந்நிலையில் இம்முறை 2014 இல் இருந்து இந்து ஆலயங்களில் நடைபெறும் ஆலய உற்சவங்கள் மற்றும் விசேட வழிபாடுகள் , விரத நாட்களில் கட்டாயம் இரவுநேர இசை நிகழ்ச்சி , கேளிக்கைகளை நடத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாக சபையினரிடம் இந்து அமைப்புக்கள் அழுத்தமாக கோரிக்கை விடுத்துள்ளன .
இதேவேளை மகா சிவராத்திரியன்று இந்து ஆலயங்கள் , இந்து இல்லங்களில் சைவக்கொடி ( இடபக்கொடி ) ஏற்றுமாறும் உலக சைவப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
மகா சிவராத்திரி தினத்தன்று கேலிக் கூத்துகள் நடத்துவதை தவிருங்கள். இந்து அமைப்புக்கள் கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
February 26, 2014
Rating:

No comments:
Post a Comment