மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
மகா சிவராத்திரயை முன்னிட்டு நாட்டிலுள்ள இந்து பாடசாலைகளுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்குப் பதிலாக மார்ச் 8ஆம் திகதி சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மகா சிவராத்திரி தினமாகும்.
மகா சிவராத்திரி நிகழ்வுகள் 27 ஆம் திகதி மாலை 6 மணிமுதல் 28 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை இடம்பெறவுள்ளதால் இந்துப் பாடசாலைகளின் மாணவர்கள் அவற்றில் கலந்துகொள்ளும் பொருட்டு விடுமுறை வழங்குமாறு தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
இது தொடர்பில் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அமைச்சின் செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களை தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்து பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
February 18, 2014
Rating:

No comments:
Post a Comment