வவுனியாவில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அருகில் வெடிச்சம்பவம்
வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அருகில் நேற்றிரவு வெடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிச் சம்பவம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவத்தில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
இந்த வெடிச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இது ஒரு பெற்றோல் குண்டு தாக்குதலாக இருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியாவில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அருகில் வெடிச்சம்பவம்
Reviewed by NEWMANNAR
on
February 22, 2014
Rating:

No comments:
Post a Comment