அண்மைய செய்திகள்

recent
-

இலத்திரனியல் கைரேகை அடையாள முறைமை நாளை முதல் அமுல்!

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் இலத்திரனியல் தானியங்கி கைரேகை அடையாள முறைமை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இலத்திரனியில் ரீதியில் கை ரேகைகளை அடையாளம் காணும் முறைமை இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அண்மையில் அறிவித்திருந்தது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் கை ரேகைகளை அடையாளம் காண இதுவரை சுமார் இரண்டு வாரங்கள் ஆனதாகவும், புதிய முறையின் மூலம் மூன்று விநாடிகளில் கைரேகைகளை அடையாளம் காண முடியும் எனவும் பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரிலேயே இந்த புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் இலங்கையில் உள்ள சகல நபர்களின் கைரேகைளையும் விபரங்களை கணனிமயப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இலத்திரனியல் கைரேகை அடையாள முறைமை நாளை முதல் அமுல்! Reviewed by NEWMANNAR on February 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.